
ரஷ்யாவுடனான போருக்கான நிதி மற்றும் வரி வருவாயைப் பெருக்க, ஆபாசப் படத் துறையை சட்டப்பூர்வமாக்க உக்ரைன் அரசு பரிசீலித்து வருகிறது.
இந்தத் துறையை முறைப்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு 2.5 கோடி டாலர் வருவாய் கிடைக்கும் என்றும், இது 30,000 ட்ரோன்களை வாங்க உதவும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
தற்போது உக்ரைனில் இத்தொழிலுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் நிலையில், நாடாளுமன்றத்தில் மசோதா இரண்டாம் கட்டப் பரிசீலனையில் உள்ளது.