
தமிழகத்தில் நீலகிரி, கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக இந்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பல மாவட்டங்களில் மிதமான மழையும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.