
நிலவின் தென் துருவத்தில் மனிதர்கள் தங்குவதற்கான நிரந்தர தளத்தை அமைக்கும் நோக்கில், 2029-க்குள் 20-க்கும் மேற்பட்ட ரோபோட்டிக் லேண்டிங் திட்டங்களை நாசா செயல்படுத்த உள்ளது.
ப்ளூ மூன் MK1 சரக்கு லேண்டர், நியூ க்ளென் ராக்கெட் மூலம் 3 மெட்ரிக் டன் எடையுள்ள பொருட்களை நிலவுக்குக் கொண்டு செல்லும் திறன் கொண்டது.
நாசாவின் இந்தத் திட்டம் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, 2032-ஆம் ஆண்டு முதல் விண்வெளி வீரர்கள் நிலவில் நீண்ட காலம் தங்கி ஆய்வு செய்யும் வசதிகள் உருவாக்கப்படும்.