
ஏமனின் மாரிப் மற்றும் ஹத்ரமவுத் மாகாணங்களில் உள்ள ராணுவ முகாம்கள் மீது ஹவுதி கிளர்ச்சிக் குழுவினர் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்ததாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் ஏமன் நாட்டு ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஹவுதி குழுவின் செய்தியாளர் யஹ்யா சரீ இந்தத் தாக்குதலில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகக் கூறியுள்ள நிலையில், மத்திய கிழக்கு பகுதிகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.