
சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் இந்திய பெண்கள் அணி 0-4 என்ற கணக்கில் ரஷ்யாவிடம் தோல்வியடைந்தது.
கொல்கத்தாவில் நடைபெற்ற இப்போட்டியில் ரஷ்ய அணி சார்பில் இயானா ஷெய்னா, கிரா பெதுகோவா மற்றும் இயானா ஸ்விஸ்துனோவா ஆகியோர் கோல் அடித்தனர்.
இவ்விரு அணிகள் மோதும் 2வது போட்டி அக்டோபர் 11 அன்று கொல்கட்டாவில் நடைபெற உள்ளது.