
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. சபை கூட்டத்தில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கியூபாவை ஒரு 'தோல்வியடைந்த நாடு' என்று கடுமையாக விமர்சித்தார்.
டிரம்பின் பேச்சைக் கண்டித்து கியூபா நாட்டு தூதர்கள் உடனடியாக கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என்றும், தங்களது நாட்டின் சுதந்திர உரிமையை அமெரிக்காவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் கியூபா வெளியுறவு மந்திரி புரூனோ ரோட்ரிக்ஸ் தெரிவித்தார்.