
கடந்த ஏப்ரல் மாதம் மறைந்த பழம்பெரும் பாடகி ஆஷா போஸ்லேயின் (92) நினைவைப் போற்றும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் 'ஆஷா ஃபாரெவர்' என்ற மியூசிக் வீடியோவை உருவாக்கி வருகிறார்.
இந்த சிறப்பு அஞ்சலி வீடியோவில் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரைத் தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினிகாந்தும் இணைந்துள்ளார்.
ரஜினிகாந்தின் முதல் இந்தி படமான 'அந்தா கானூன்' படத்தில் லக்ஷ்மிகாந்த்-பியாரேலால் இசையில் ஆஷா போஸ்லே மூன்று பாடல்களைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.