
குஜராத் மாநிலம் ராஜ்கோட் கிராமப்புறப் பகுதிகளில் மருத்துவப் பட்டம் இல்லாமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த 17 போலி மருத்துவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் 10 மற்றும் 12-ம் வகுப்பு மட்டுமே படித்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்களது கிளினிக்குகளில் இருந்து அலோபதி மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.