
இந்திய சந்தையில் ரூ. 1.77 கோடி ஆரம்ப விலையில் போர்ஷே Cayenne எலெக்ட்ரிக் கார் செப்டம்பர் 30-ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
113 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் டூயல் எலெக்ட்ரிக் மோட்டார்கள் கொண்ட இந்த கார், ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 642 கி.மீ. வரை செல்லும்.
இந்த எஸ்.யூ.வி. மாடல் 11 கிலோவாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட முதல் போர்ஷே கார் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.