
சீனாவின் தியாங்காங் விண்வெளி நிலையத்தில் சென்ஜூ-23 திட்டம் மூலம் சுமார் இரண்டு மாதங்கள் நெல் விளைவித்து சீன விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
எதிர்காலத்தில் நிலா மற்றும் செவ்வாய் கிரகங்களில் மனிதர்கள் குடியேறும்போது, அங்கேயே உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய இந்த ஆய்வு உதவும் என நம்பப்படுகிறது.
இதற்கு முன்னதாக 2022-ம் ஆண்டு 120 நாட்கள் விண்வெளியில் நெல் விளைவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த அனுபவத்தைக் கொண்டு புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.