
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஓமனில் வருகிற நவம்பர் 5 ஆம் தேதி தொடங்கி 14 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், பிசிசிஐ அணியை அறிவித்துள்ளது.
இந்திய அணியின் முன்னாள் வீரர்களான ராகுல் டிராவிட் மற்றும் வீரேந்திர சேவாக்கின் மகன்களான அன்வே டிராவிட் மற்றும் ஆர்யவீர் சேவாக் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர்.
குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் மோதுகிறது.