
சிங்கப்பூரில் பஸ் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருக்கைகள் மீது கால்களை வைப்பது, சத்தமாக ஆடியோ கேட்பது மற்றும் உணவு உண்பது போன்ற செயல்களுக்கு புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இத்தகைய விதிமீறல்களில் ஈடுபடும் பயணிகளுக்கு 500 சிங்கப்பூர் டாலர் வரை அபராதம் விதிக்கப்படலாம் எனவும், பஸ்சில் அழுக்கு ஏற்படுத்தும் செயல்களுக்கு அதிகபட்சம் ரூ.3.74 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பயனிகளைத் தடுத்து அறிவுறுத்தும் அதிகாரம் பஸ் கேப்டன்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அபராதம் வசூலிக்கும் பணியில் டிக்கெட் பரிசோதகர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.