
தமிழ்நாட்டில் நீட் தேர்வு முறையை முற்றிலும் ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தனியார் பயிற்சி மையங்கள் மட்டுமே நீட் தேர்வால் பயனடைவதாகவும், ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவு பாதிக்கப்படுவதாகவும் அமைச்சர் அருண்ராஜ் பேரவையில் குறிப்பிட்டார்.
இந்தத் தீர்மானத்திற்கு பாமக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தமிழிசை சவுந்தரராஜன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.