
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தமிழக கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
இது மேலும் வலுவடைந்து புயலாக மாறினால், அதற்கு 'முரசு' எனப் பெயரிடப்படும். இந்தப் பெயரை இந்தியா பரிந்துரைத்துள்ளது.
புயல்களுக்குப் பெயரிடும் பழக்கம் 2004 முதல் உள்ளது. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 13 நாடுகள் பெயர்களைத் தேர்வு செய்கின்றன.