
மதிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள 'மண்டாடி' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ள நிலையில், இப்படம் செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
எல்ரட் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாகவும், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.
மீனவர்களின் படகுப் போட்டியை மையமாகக் கொண்ட இப்படத்தில் சத்யராஜ், சுஹாஸ் மற்றும் ரவீந்திரா விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.