/nakkheeran/media/media_files/2026/10/15/supremecourt-2026-10-15-19-28-40.jpg)
எஸ்.ஐ.ஆர் மூலம் 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் முறைகேடாக நீக்கப்பட்டதாகக் கூறி காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளன.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும், கடந்த 12ஆம் தேதி ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பேரணியாகச் சென்று உச்சநீதிமன்றத்தில் அத்துமீறி நுழைந்தது குறித்த வழக்கிலும் பதிலளிக்க ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.