
வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து இன்று அர்னாப் புயலாக மாறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக தமிழகத்தில் 35 இடங்களில் நிலச்சரிவு மற்றும் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.