
டெல்லியைச் சேர்ந்த பைனான்சர்சாப் என்ற நிதிச் சேவை நிறுவனம், தனது ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக புதிய 'ஐபோன் 16' ஸ்மார்ட்போன்களை வழங்கியுள்ளது.
அலுவலகத்தில் ஊழியர்களின் மேஜைகளில் ஐபோன் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாரம்பரிய இனிப்புகளுக்குப் பதிலாக லட்சக்கணக்கில் செலவு செய்து பரிசளித்த நிறுவனத்தின் செயலை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.