
தமிழகத்தில் உள்ள 29 சமூகநீதி பள்ளி விடுதிகள் கல்லூரி விடுதிகளாக தரம் உயர்த்தப்படும் என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத் குமார் அறிவித்துள்ளார்.
ரூ.25.76 கோடி செலவில் 960 விடுதிகளுக்கு இன்வெர்ட்டர், ஃபிரிட்ஜ் மற்றும் தண்ணீர் சுத்திகரிப்பு கருவிகள் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.3 கோடி செலவில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல வாரியம் அமைக்கப்படும் என்றும், சென்னையில் ரூ.54 லட்சம் செலவில் புதிய கல்லூரி மாணவிகள் விடுதி தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.