
ஓல்ட் மாங்க், ராயல் சேலஞ்ச் மற்றும் பேக்பைப்பர் உள்ளிட்ட பிரபல மதுபான பிராண்டுகளின் குறிப்பிட்ட தயாரிப்புகளுக்கு FSSAI விற்பனைத் தடை விதித்துள்ளது.
இயற்கையான முறைக்குப் பதிலாக செயற்கையான சுவையூட்டிகள் மற்றும் நறுமணத் திரவியங்கள் சேர்க்கப்பட்டிருப்பது ஆய்வகப் பரிசோதனையில் கண்டறியப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஓல்ட் மாங்க் ரம் 7 ஆண்டுகள் பக்குவப்படுத்தப்பட்டது என்ற லேபிளில் உள்ள விளம்பரம் தவறானது என மத்திய சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.