
ஆஸ்திரேலியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி டார்வினில் இன்று தொடங்குகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 87.50 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி, தனது இடத்தைத் தக்கவைக்க இந்த வெற்றியை இலக்காகக் கொண்டுள்ளது.
இரு அணிகளும் இதுவரை மோதிய 6 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா 5 வெற்றிகளையும், வங்காளதேசம் ஒரு வெற்றியையும் பெற்றுள்ள நிலையில், 23 ஆண்டுகளுக்குப் பிறகு வங்காளதேசம் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் விளையாடுகிறது.