
எதிர்காலப் போர்கள் விண்வெளியை மையமாகக் கொண்டு நடைபெறும் என்ற சூழலில், அமெரிக்கா தனது ஆயுதங்களை விண்வெளியில் நிலைநிறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கைக்கு சீனாவும் ரஷ்யாவும் கடும் கவலை தெரிவித்துள்ள நிலையில், விண்வெளியில் செயற்கைக்கோள்களை அழிக்கும் தொழில்நுட்பம் சில நாடுகளிடம் மட்டுமே உள்ளது.
இந்தியா கடந்த 2019 மார்ச் 27 அன்று 'மிஷன் சக்தி' மூலம் குறைந்த புவி வட்டப்பாதையில் செயற்கைக்கோளை அழித்து தனது திறனை நிரூபித்துள்ளது.