
ஹாங்காங்கின் குவாய் சங் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பார்சல் வாங்கிய பெண், நூடுல்ஸ் மற்றும் சாஸ்க்கு நடுவே உயிருடன் இருந்த எலிக்குட்டியைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோவைத் தொடர்ந்து, உணவு மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரத் துறை அதிகாரிகள் அந்த உணவகத்தில் சோதனை நடத்தினர்.
உணவகத்தில் சுகாதாரக் குறைபாடுகள் கண்டறியப்பட்டதை அடுத்து, உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.