
இந்தோனேசியாவில் அனாக் கிரகடாவ் எரிமலை வெடித்துச் சிதறியதால், வானத்தில் சாம்பல் மேகங்கள் சூழ்ந்த நிலையில் 6 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இந்த இயற்கை பேரிடரால் 58 சர்வதேச விமானங்கள் உட்பட மொத்தம் 301 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு, பயணிகள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சுமத்ரா பகுதியில் 15,000 மீட்டர் மற்றும் ஜாவா பகுதியில் 6,000 மீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை பரவியுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.