
விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியான 'பத்தா' படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
படம் வெளியாகி ஏழாவது நாளான நேற்று ஒரு கோடியே 29 லட்சம் ரூபாயை இப்படம் வசூலித்துள்ளதாக சாக்னில்க் இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் திரையரங்குகளில் முதல் ஒரு வாரத்தில் மொத்தம் 14 கோடியே நான்கு லட்சம் ரூபாயை வசூலித்துள்ளது.