/nakkheeran/media/media_files/2026/10/21/ntk-karthika-tn-police-2026-10-21-11-55-58.jpg)
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலின்போது தேர்தல் நடத்தை விதிமீறல்களில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்தது, காவல்துறையினரைப் பணி செய்யவிடாமல் தடுத்தது, தகாத வார்த்தைகளைப் பேசியது மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கார்த்திகா உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் துண்டை அணிந்திருந்தவரை தாக்கியது மற்றும் முதலமைச்சரின் வருகையின்போது இடையூறு செய்யும் நோக்கில் அனுமதியின்றி கூடியது ஆகிய புகார்களின் பேரிலும் மற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.