
ஈரான் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடம் உதவும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஐ.நா. சபை கூட்டத்தின் போது தெரிவித்தார்.
அண்டை நாடுகளின் வணிக கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தீவிரவாத தாக்குதல்களால் எரிசக்தி உள்கட்டமைப்பை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடம் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பரில் டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின் போது அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.