ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, HSBC பிரேசில் ஃபண்ட், குளோபல் கன்சூமர் மற்றும் எமர்ஜிங் மார்க்கெட்ஸ் ஆகிய 3 சர்வதேச ஃபண்டுகளில் முதலீடு மீண்டும் தொடங்கியுள்ளது.
சர்வதேச முதலீடுகளில் ஈடுபடும்போது, இந்திய ரூபாயின் மதிப்பு மாற்றம் மற்றும் அந்தந்த நாடுகளின் அரசியல், பொருளாதார மாற்றங்கள் லாபத்தைப் பாதிக்க வாய்ப்புள்ளது.
கடந்த ஆண்டு அதிக லாபம் கொடுத்தது என்பதற்காக மட்டும் முதலீடு செய்யாமல், சர்வதேச சந்தையில் உள்ள ஆபத்துகளை நன்கு ஆராய்ந்து முதலீடு செய்ய வேண்டும் என முதலீட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.