
கர்நாடகாவிலிருந்து உரிய காவிரி நீரைப் பெற தமிழக அரசு தவறியுள்ளதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருச்சி விமான நிலையத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.
சம்பா சாகுபடிக்கு ஜனவரி வரை தண்ணீர் தேவைப்படும் நிலையில், முறையான திட்டமிடல் இல்லாமல் தமிழக அரசு தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதனால் எதிர்காலக் குடிநீருக்குக்கூட தண்ணீர் இல்லாமல் போய்விடும் எனவும், பிரதமர் தலையிடக் கோரி தமிழக அரசு அழுத்தம் தரவில்லை எனவும் தெரிவித்தார்.