
காவிரி நீர் பங்கீட்டு அட்டவணையின்படி கர்நாடகா தண்ணீர் திறக்கவில்லை என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலை அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.
தமிழகத்திற்கு வர வேண்டிய 17 டிஎம்சி நிலுவை நீருடன், ஆகஸ்ட் மாதத்திற்கான முழு நீரும் கிடைக்கவில்லை என அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது திறக்கப்படும் 9,000 கன அடி நீர் போதாது என்பதால், அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 22,000 கன அடி நீரைத் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.