
ஐபிஎல் 2027 கிரிக்கெட் சீசனில் தான் விளையாடுவது குறித்து வரும் டிசம்பர் மாதம் முடிவு செய்ய உள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அவர், தான் சில மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டி உள்ளதாகவும், அதன் முடிவுகளைப் பொறுத்தே அடுத்த சீசனில் விளையாடும் உடல் தகுதி தெரியவரும் என்றும் கூறினார்.
45 வயதான தோனி, கடந்த ஐபிஎல் சீசன் முழுவதையும் காயம் காரணமாக தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.