
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று ஆகஸ்ட் 23-ம் தேதி இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் குறிப்பிட்ட 13 மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும், நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் ஆகஸ்ட் 27 வரை மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.