/nakkheeran/media/media_files/2026/09/14/tn-police-2026-09-14-17-13-33.jpg)
ஈரோட்டில் வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு திராவிடர் கழகம் சார்பாக ஊர்வலம் நடத்தக் கோரி நகரக் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையைக் காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டதாகத் தகவல்கள் பரவிய நிலையில், ஈரோடு மாவட்ட காவல் துறை அனுமதி மறுப்பு என்பது முற்றிலும் தவறான செய்தி என விளக்கமளித்துள்ளது.
ஈரோடு நகரக் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட மனுவின் அடிப்படையில் பெரியார் பிறந்தநாள் ஊர்வலத்திற்கு ஈரோடு காவல்துறை தரப்பில் செயல்முறை ஆணை வழங்கப்பட்டுள்ளது.