கோவையில் உள்ள ஜவுளித்துறையினர் இணைந்து பொருளாதார மற்றும் சந்தை நிலவரங்களைத் தெரிந்துகொள்ள உதவும் 'கோயம்புத்தூர் இன்வெஸ்டர்ஸ் நெட்வொர்க்' (காய்ன்) என்ற புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளனர்.
இந்த அமைப்பு தனது உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு 45 நாட்களுக்கு ஒருமுறை பொருளாதார நிபுணர்களை அழைத்து கருத்தரங்குகளை நடத்த திட்டமிட்டுள்ளது.
புதிய மற்றும் அனுபவமுள்ள முதலீட்டாளர்கள் ஒன்றாகக் கற்றுக்கொண்டு சிறந்த முதலீட்டு முடிவுகளை எடுக்க இந்த அமைப்பு எந்தவிதக் கட்டணமுமின்றி வழிகாட்டவுள்ளது.