
ஆஸ்திரேலிய அணியின் 38 வயதான முன்னணி ஆல்ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்காக 7 டெஸ்ட், 149 ஒருநாள் மற்றும் 130 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், இருமுறை 50 ஓவர் உலகக்கோப்பை மற்றும் ஒருமுறை டி20 உலகக்கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றிருந்தார்.
2028 ஒலிம்பிக்கிற்கு இளம் வீரர்களைத் தயார் செய்ய வழிவிடும் வகையிலும், பிக்பாஷ் தொடரில் மெல்போர்ன் அணிக்காகத் தொடர்ந்து விளையாடவும் இந்த ஓய்வை அறிவித்துள்ளார்.