
மேகதாது அணை விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் எந்த அனுமதியோ அல்லது உத்தரவோ வழங்கக்கூடாது எனத் தடை கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
காவிரி படுகை பற்றாக்குறை பகுதி என்பதால், புதிய திட்டங்களுக்கு அனுமதி மற்றும் பரிசீலனை குறித்து ஆணையம் முடிவெடுக்கும் வழிகாட்டுதலை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியைக் கைவிட்டு, தமிழக அரசு சட்டபூர்வமான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.