
சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற 41-வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி 317.2 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
பெண்கள் பிரிவு (175.2 புள்ளிகள்), 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு, மற்றும் 14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவு ஆகியவற்றிலும் தமிழ்நாடு முதலிடம் பிடித்தது.
அரியானா அணி 303 புள்ளிகளுடன் ஒட்டுமொத்தப் பிரிவில் 2-வது இடத்தைப் பிடித்தது.