
வாக்காளர் தீவிர திருத்தப் பணி மற்றும் தேர்தல் தலைமை ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக டில்லியில் போராட்டங்கள் நடந்துவரும் நிலையில், 124 முன்னாள் ஐஏஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகள் அவருக்கு ஆதரவு கடிதம் எழுதியுள்ளனர்.
எந்தக் கட்சியையும் சாராத தாங்கள் ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றியுள்ளதாகவும், 2025ல் பீஹாரில் மறு தேர்தல் இன்றி அமைதியாக தேர்தல் நடந்து முடிந்திருப்பது நிர்வாகத்தின் முன்னேற்றத்தைக் காட்டுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தேர்தல் தோல்விக்குப் பிறகு மக்களிடம் செல்வாக்கை நிலைநிறுத்தவே எதிர்க்கட்சிகள் இதுபோன்ற போராட்டங்களை முன்னெடுத்து வருவதாக முன்னாள் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.