
வங்கிகளுக்கு அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் பெயரில் வெளியான அறிவிப்பு போலியானது என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு தற்போது 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக வங்கி ஊழியர்கள் அறிவித்திருந்த வேலைநிறுத்தப் போராட்டம், மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது.