/nakkheeran/media/media_files/2026/10/31/219-2026-10-31-17-20-16.jpg)
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி முதல்வர் விஜய் அரசாணையை வெளியிட்டுள்ளார்.
இந்த உயர்வு மூலம் தமிழகத்தில் உள்ள சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நேரடியாகப் பயனடைவதுடன், அகவிலைப்படியானது 60 விழுக்காட்டிலிருந்து 63 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
இந்த அகவிலைப்படி உயர்வானது கடந்த ஜூலை மாதம் 1-ஆம் தேதியை முன் தேதியிட்டு கணக்கிடப்பட்டு, நிலுவைத் தொகையுடன் அடுத்தடுத்த நாட்களில் ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.