/nakkheeran/media/media_files/2026/10/24/lakshmi-bhavya-tanneeru-2026-10-24-21-36-40.jpg)
இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று மற்றும் நாளை நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளதால் அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் மற்றும் கோத்தகிரி வழியாக உதகை செல்லும் மலைப்பாதைப் பயணங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு அரசு பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களுக்கு இரவு நேரப் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தொடர்பு கொள்ள 24 மணி நேர அவசரக் கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கட்டணமில்லா எண் 1077 மற்றும் மாவட்ட அவசரகால மைய எண்கள் செயல்பாட்டில் உள்ளன.