
விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
பயணிகளின் அதிகரிப்பு எதிரொலியாக விமானக் கட்டணங்கள் பலமடங்கு உயர்ந்துள்ளதாக பயணிகள் தெரிவித்தனர்.
சென்னை-தூத்துக்குடி கட்டணம் ரூ.6,900-ல் இருந்து ரூ.17,153 ஆகவும், சென்னை-மதுரை கட்டணம் ரூ.5,393-ல் இருந்து ரூ.19,761 ஆகவும் உயர்ந்துள்ளது.