
சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான 'மூக்குத்தி அம்மன் 2' படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வந்த நிலையில், நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
Sacnilk இணையதளத்தின் தகவல்படி, இப்படத்தின் இரண்டாவது நாளில் தமிழில் ரூ. 2 கோடியே 30 லட்சமும், தெலுங்கில் ரூ. 15 லட்சமும் என மொத்தம் ரூ. 2 கோடியே 45 லட்சம் வசூலித்துள்ளது.
முதல் நாளைவிட இரண்டாவது நாள் வசூல் ஒரு கோடி ரூபாய் அதிகரித்துள்ள நிலையில், படம் இதுவரை மொத்தம் ஐந்து கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.