
பூமியின் சுற்றுப்பாதையில் சுமார் 13,000 டன்களுக்கும் அதிகமான விண்வெளிக் கழிவுகள் மிதந்து வருவதாகவும், அவை பூமியை நோக்கி விழும் அபாயம் உள்ளதாகவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த விண்வெளிக் கழிவுகள் விநாடிக்கு சுமார் 7 கி.மீ வேகத்தில் சுற்றி வருவதால், செயல்பாட்டில் உள்ள செயற்கைக்கோள்கள் மீது மோதி விபத்துகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை போன்ற அமைப்புகள் இந்த கழிவுகளைக் கண்காணிக்க சிறப்பு செயற்கைக்கோள் நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தி வருகின்றன.