
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது கடந்த கால உறவில் இரண்டு ஆண்டுகள் நார்சிஸ்டிக் கொடுமைகளால் பாதிக்கப்பட்டதாகப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அந்த உறவில் இருந்த நபர் தன்னை ‘டிராகன்’ போன்ற படங்களின் விளம்பரங்களுக்குக் கூட செல்ல விடாமல் தடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன்னைத்தானே சரிபடுத்திக்கொள்ளும் பயணத்தில் இருப்பதாகக் கூறிய அனுபமா, அந்த நபர் யார் என்பதை வெளிப்படுத்தவில்லை.