
ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில் 20வது ஆசிய விளையாட்டுப் போட்டி இன்று தொடங்கி அக்டோபர் 4 வரை நடைபெறவுள்ள நிலையில், தொடக்க விழா அணிவகுப்பில் இந்திய வீரர்கள் மனு பாகர் மற்றும் பவன் ஷெராவத் தேசிய கொடியை ஏந்திச் சென்றனர்.
இத்தொடரில் 45 நாடுகளைச் சேர்ந்த 11,000 பேர் பங்கேற்கும் நிலையில், இந்தியா சார்பில் 35 போட்டிகளில் 267 வீரர்கள் மற்றும் 234 வீராங்கனைகள் உள்பட 501 பேர் கலந்துகொள்கின்றனர்.
தொழில்நுட்பப் பிரச்சனை காரணமாக குண்டு எறிதல் வீரர் தஜிந்தர்பால் சிங் பங்கேற்க முடியாததால் அவருக்குப் பதிலாக கபடி வீரர் பவன் ஷெராவத் தேசிய கொடி ஏந்தும் வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.