
முந்தைய ஆட்சியில் லஞ்சம் கொடுத்ததை சட்டமன்றத்தில் ஒப்புக்கொண்ட நிதியமைச்சர் மரிய வில்சன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் பி.என்.எஸ் பிரிவுகளின் கீழ் மரிய வில்சன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
விசாரணை முடியும் வரை மரிய வில்சனை அமைச்சரவையில் இருந்து முதல்வர் விஜய் நீக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.