
நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு நடிப்பில் கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் வெளியான 'பெத்லகேம் குடும்ப யூனிட்' திரைப்படம், உலகளவில் 3 நாட்களில் ரூ.63 கோடி வசூலித்துள்ளது.
பாவனா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
காதல் மற்றும் நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம், விரைவில் ரூ.100 கோடி வசூல் கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.