
வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகள் சைமா வாசெத், உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசிய பிராந்திய இயக்குநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நிதி மோசடி மற்றும் போலி கல்விச் சான்றிதழ் சமர்ப்பித்தது தொடர்பான புகார்களில் சிக்கியுள்ள சைமா வாசெத், தலைமை மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி விலகியுள்ளார்.
வங்காளதேசத்தில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், அவரது குடும்பத்தினர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.