
மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் அமெரிக்காவுக்கு ஒருநாள் முன்னதாக இந்தியாவில் வெளியாகவுள்ளது.
இதன்படி வரும் டிசம்பர் 17-ஆம் தேதி இந்தியத் திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என்று ஹாலிவுட் நடிகர்கள் ராபர்ட் டவுனி ஜூனியர் மற்றும் கிறிஸ் எவன்ஸ் ஆகியோர் தீபாவளி வாழ்த்துகளுடன் அறிவித்துள்ளனர்.
அந்தோணி ரூஸோ மற்றும் ஜோ ரூஸோ இயக்கும் இப்படத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர் வில்லனான டாக்டர் டூமாகவும், கிறிஸ் எவன்ஸ் கேப்டன் அமெரிக்காவாகவும் நடிக்கின்றனர்.